ப சிதம்பரத்தை விசாரிக்கத் தேவையில்லை - சு சாமி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

P Chidambaram
டெல்லி: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் ப சிதம்பரத்தை இணை குற்றவாளியாக்கி விசாரிக்கத் தேவையில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சுப்பிரமணி சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்வதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி அறிவித்தார்.

இதனால் ப சிதம்பரத்தின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தி அகற்றப்பட்டுள்ளது.

ரூ 1.76 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டு வழக்கில், பிரதான குற்றவாளிகளுள் ஒருவராக ப சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்றும், அதற்கான சான்றுகள் தன்னிடம் உள்ளதாகவும் கூறி சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ பி ஷைனி.

இந்த வழக்கின் முடிவில்தான் சிதம்பரத்தின் அரசியல் எதிர்காலமே இருந்தது. எனவே தீர்ப்பைக் கேட்க ஏராளமானோர் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.

காலையிலேயே நீதிமன்றத்துக்கு வந்துவிட்ட சுப்பிரமணிய சாமியை, பிற்பகல் 12.30க்கு வருமாறு நீதிபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிற்பகல் 1.40 க்கு தீர்ப்பை அறிவித்தார் ஓ பி சைனி.

"2 ஜி முறைகேடு வழக்கில் ப சிதம்பரத்தை இணை குற்றவாளியாக சேர்க்க தேவையில்லை. இது தொடர்பா சுப்பிரமணிய சாமி தொடர்ந்துள்ள மனுவை ரத்து செய்கிறேன்," என்றார் நீதிபதி.

இந்தத் தீர்ப்பைக் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ப சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டதும், இதுகுறித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என நீதிபதிகள் அறிவித்ததும் நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+