இப்போது இருப்பதே அருமையான பிரதமர்தான், ராகுலுக்கு பிரதமர் ஆசை இல்லை-பிரியங்கா
ரேபரேலி: பிரதமராக வேண்டும் என்பது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் நோக்கம் அல்ல என்று அவரது சகோதரி பிரயங்கா வாத்ரா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகளும், பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரங்கா வாத்ரா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சோனியாவின் தொகுதியான ரேபரேலியில் பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பிரதமராவது ராகுல் காந்தியின் நோக்கம் அல்ல. தற்போதே நமக்கு மிகவும் அருமையான பிரதமர் உள்ளார். நேர்மையாகவும், கடினமாக உழைக்கக்கூடிய பிரதமர் கிடைத்ததிருப்பதால் நாம் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள். ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவோ, நாட்டின் பிரதமராகவோ ஆகும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வழுப்படுத்துவது தான் தற்போதைக்கு ராகுலின் நோக்கம். அவர் தனது நற்பெயர் கெட்டுவிடுமோ என்றெல்லாம் பயப்படுபவர் அல்ல. முன்னாள் நின்று வழிநடத்திச் செல்ல கோழைகள் தான் அஞ்சுவார்கள்.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வழுவாக இல்லாவிட்டாலும், அங்கு பாடுபட்டு கட்சியை வளர்க்கப் போவதாக கடந்த 2007ம் ஆண்டே ராகுல் என்னிடம் தெரிவித்தார். இந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகத் தான் என் சகோதரர் பாடுபடுகிறார். இளைஞர் காங்கிரஸில் ராகுல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். எந்த கட்சியிலும் இல்லாத ஜனநாயகத்தை காங்கிரஸில் கொண்டு வருகிறார். நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. ஆனால் கடந்த தடவையைவிட இந்த முறை காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
கடந்த 22 ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தில் ஊழல் மற்றும் குற்றங்கள் தலைதூக்கியுள்ளன. இதைப் பார்த்து பார்த்து மக்கள் வெறுத்துவிட்டனர். மற்ற மாநிலங்களை விட இந்த மாநிலம் பின்தங்கியுள்ளது. நான் முன்னேற்றத்தை நோக்கி பணியாற்றுகிறோம். இது சாதி, மத அரசியலை விட உயர்ந்தது. ஊழல் அரசியல் இனியும் நீடிக்கக் கூடாது என்றார்.
பிரியங்கா கடந்த 3 நாட்களாக ராகுலின் தொகுதியான அமேதி மற்றும் சோனியாவின் தொகுதியான ரேபரேலியில் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications