பிரிந்து வாழும் மனைவி வாழ கணவர் வீட்டில் இடம் ஒதுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

வழக்கு என்ன?
டெல்லியை சேர்ந்த பனாட் மற்றும் சவீதா. கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், 23 ந் தேதி திருமணம் செய்துகொண்டு தம்பதியராக வாழ்ந்தனர்.
அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து 2005 ம் ஆண்டு ஜுலை முதல் பிரிந்து வாழத் தொடங்கினர். 2006 ம் ஆண்டு, நவம்பர் 29 ந் தேதி உள்ளூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றாத்தில் குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் சவீதா ஒரு வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, பிரிந்து போன மனைவி சவீதாவுக்கு கணவர் தனது வீட்டின் முதல் மாடியை ஒதுக்குவதுடன், மாதம் ரூ.6 ஆயிரம் ஜீவனாம்சம் தருமாறு உத்தரவிட்டார். அப்படி தர விரும்பாத பட்சத்தில் சவீதா வேறு வீடு பார்த்து குடியேற ஏற்ற வகையில் வாடகை என்ற பெயரில் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்புகளை எதிர்த்து சவீதாவின் கணவர் பனாட் மேல்நீதிமன்றங்களில் முறையீடு செய்தும் பலனில்லை. அனைத்து நீதிமன்றங்களிலும் தீர்ப்பு தள்ளுபடியாக கடைசியாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், ஜே. செலாமேஷ்வர் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு வழங்கினர்.
தீர்ப்பு விவரம்
குடும்ப வன்முறைச்சட்டம் அமலுக்கு வரும் முன்பாகவே அந்தப்பெண் பிரிந்து வாழ்ந்தாலும்கூட, அந்தச்சட்டத்தின்படி அவர் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு. கணவரின் வீட்டில் வசிக்கும் உரிமையும் உண்டு.
இருப்பினும் எதிர்வழக்குதாரர் (சவீதா) தனது வீட்டில் வசிப்பதை வழக்குதாரர் ஏற்க மறுத்தால், அவர் மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்ள மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற உத்தரவு மாதம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற அளவில் மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் ஜீவனாம்சமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications