For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு கடும் எதிர்ப்பு-மோடி, நிதீ்ஷ், மமதா, ஜெ, நவீன் எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi
அகமதாபாத்(குஜராத்): மத்திய அரசு அமைக்க உள்ள தேசிய அளவிலான பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு மாநில முதல்வர்களின் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

மாநிலங்களின் உரிமைகளில் தலையிடும் விதமாக மத்திய அரசின் முடிவு இருப்பதாகக் கூறி இதனை கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.

இதேபோல் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். மேலும் மமதா பானர்ஜி மட்டுமின்றி தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடனும் அவர் தொலைபேசியில் இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார். மேலும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

இதேபோல் பீகார் முதல்வரான நிதிஷ்குமாரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் குஜராத் முதல்வரான நரேந்திர மோதியும் மத்திய அரசின் தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மன்மோகனுக்கு கடிதம் எழுத உள்ளனர்.

தேசிய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றில் இடம்பெற்றிருந்தாலும் தேசிய பயங்கரவாத தடுப்பு மைய பிரச்சனையில் ஒன்றிணைந்த குரல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தேசிய அளவிலான பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது என்பது மாநிலங்களின் உரிமைகளில் தலையிடும் விவகாரம் என்பதே மாநில முதல்வர்களின் கருத்தாகும்.

English summary
Gujarat Chief Minister Narendra Modi is expected to add his weight to a steadily increasing number of CMs who are taking on the Centre against the Centre's move to set up a National Counter Terrorism Centre (NCTC) under the Ministry of Home Affairs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X