குஜராத்துக்கு மதக் கலவரம் புதிதில்லை, நான் பிறப்பதற்கு முன்பே ஆயிரக்கணக்கில் நடந்துள்ளது-மோடி

Subscribe to Oneindia Tamil

Narendra Modi
அகமதாபாத்: குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல. நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும் என்று கூறியுள்ளார் முதல்வர் நரேந்திர மோடி.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி, குஜராத் மாநிலம் கோத்ராவில், அயோத்தி கரசேவைக்குச் சென்றவர்கள் பயணித்த ரயில் பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் அந்த பெட்டியில் பயணம் செய்த சாமியார்கள் உயிருடன் எரிந்து சாம்பலானார்கள்.

இதையடுத்து குஜராத்தில் பெரும் மதக் கலவரம் மூண்டது. ஆயிரக்ணக்கில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கொடூரமாக பலர் எரித்தும், சித்திரவதை செய்தும் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரம் தொடர்பாக மாநில உயர் போலீஸ் குழு, சி.பி.ஐ., உச்சநீதிமன்றம் நியமித்த குழு ஆகியவை விசாரித்தன. இதில், குல்பர்க் ஹவுசிங் சொசைட்டி படுகொலை உள்ளிட்ட 10 கலவர வழக்குகளை விசாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை (எஸ்.ஐ.டி.) அமைத்தது. இந்தக்குழு முதல்வர் மோடியிடம் விசாரணை நடத்தியது.

நரேந்திரமோடி, 2010 மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது, எஸ்ஐடி அதிகாரி ஏ.கே. மல்கோத்ரா எழுப்பிய 71 கேள்விகளுக்கும், நரேந்திரமோடி விளக்கமாக பதில் அளித்தார்.

இந்த நிலையில் இம்மாதம் 14-ந்தேதி சிறப்பு புலனாய்வு குழு, விசாரணை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை, அவர் குற்றமற்றவர் என்று கூறப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த அறிக்கையின் விவரங்கள், அதாவது மோடி அளித்த வாக்குமூலம் குறித்தத் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த வாக்குமூலத்தில் குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்தது மதக்கலவரம்தான் என்று மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார் மோடி. மேலும் அதை நியாயப்படுத்தியும் பேசியுள்ளார். இதற்காக வரலாறுகளையும் அவர் துணைக்கு அழைத்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது...

குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல. நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்த உடன், எனது இல்லத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னாள் துணை கமிஷனரான (புலனாய்வு) சஞ்சீவ்பட் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏனெனில் நடந்தது உயர்மட்டக்குழு கூட்டம் என்பதால், ஜூனியர் அதிகாரியான சஞ்சீவ்பட் அழைக்கப்படவில்லை என்று மோடி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+