ஒரேயொரு குஜராத் தான்!

Subscribe to Oneindia Tamil

குஜார்த கலவரம் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு வாழும் முஸ்லிம்கள் ஏழ்மையில் உழல்வதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் உண்மையில் 2002ம் ஆண்டுக்கு பிறகு குஜராத்தில் வாழும் முஸ்லிம்களின் நிலை உயர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

குஜராத்தில் கலவரம் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 'கலவரத்திற்குப் பிறகு குஜராத்' என்ற தலைப்பில் தொலைக்காட்சி சேனல்கள் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. குஜராத் மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் நிலை குறித்து தான் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

குஜராத் கலவரம் பற்றி ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைப் பார்த்தால் அதில் அம்மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள் ஏழ்மையில் உழல்வதாகவே உள்ளன. ஒரு முஸ்லிம் குடும்பம் குடிசையில் தெரு நாய்கள், ஆடுகளுக்கு மத்தியில் வாழ்வது போன்று பல சேனல்கள் செய்தி வெளியிட்டன. மேலும் குழந்தைகள் அழுது கொண்டும், அவர்களைச் சுற்றி கொசுக்கள் கூட்டம் பறப்பதுமாக 2002 கலவரம் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இது உண்மையா? 2002ம் ஆண்டிற்குப் பிறகு குஜராத்தில் வாழும் முஸ்லிம்களின் நிலை நிஜமாகவே மோசமடைந்துள்ளதா? இல்லை என்பது தான் உண்மை. பிற மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலையைவிட குஜராத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாக சச்சார் கமிட்டி தெரிவித்துள்ளது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் சத்பாவனா உண்ணாவிரதத்தின்போது பேசிய பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மோடியின் அரசு ஒரு முஸ்லிம் தொழில் அதிபருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்ததை நினைவு கூர்ந்தார். குஜராத் கலவரத்திற்குப் பிறகு எஸ்.எஸ். கந்த்வாலா என்னும் முஸ்லிம் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

ஆனால் குஜராத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்ற உண்மையை யாராவது வெளிச்சத்திற்கு கொண்டு வந்தால் அவர்களின் வேலை போகிறது. மௌலானா வஸ்தவி நரேந்திர மோடியைப் புகழப்போய் தான் வேலையை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+