For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரண்டு குஜராத்துகள்: ஆதாயமற்ற விவாதம்

By Siva
Google Oneindia Tamil News

Narendra Modi
நிஜத்தில் ஒரோயொரு குஜராத் இருக்கையில் ஊடகங்கள் இரண்டு வகையான குஜராத் குறித்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஊடகங்களைப் பொருத்த வரையில் அழகான அகமதாபாத் உள்ள குஜராத், ஒழுங்கற்ற சிறிய சந்து, பொந்துகளாக உள்ள முஸ்லீம்கள் வாழும் பகுதியுள்ள குஜராத் என்று இரண்டு குஜராத் உள்ளன.

நிஜத்தில் குஜராத் அனைத்து மாநிலங்களை விட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. விவசாயத்துறையில் 11 சதவீத வளர்ச்சி கண்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த மாநிலம் குஜராத். அந்த மாநிலத்தில் வணிகரைப் போன்று விவசாயியும் முன்னேறிக் கொண்டிருக்கிறார். மேலும் அங்கு வாழும் இந்துக்களைப் போன்றே முஸ்லிம்களும் பாதுகாப்பாக உள்ளனர். அக்ஷர்தம் தாக்குதலுக்குப் பிறகோ அல்லது 26/7 குண்டுவெடிப்புக்குப் பிறகோ அங்கு ஏதாவது வன்முறை வெடித்ததா?

மோடி அரசு நடந்ததற்கெல்லாம் மன்னிப்பு கேட்க மறுப்பதாக தொலைக்காட்சி சேனல்களும், செய்தித் தாள்களும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தன்னை தாராளமாக தூக்கில் போடலாம் என்று குஜராத் முதல்வர் மோடி ஒன்றல்ல, இரண்டல்ல பலமுறை கூறியுள்ளார். மேலும் நடந்தவைக்கு அவர் பலமுறை வருத்தம் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு கலவரத்திற்குப் பிறகு குஜராத்தில் கலவரமும் ஏற்பட்டதில்லை, 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதில்லை.

சாதி, மதங்களைத் தாண்டி குஜராத்தில் வாழும் 6 கோடி மக்களை காக்க மோடி எடுக்கும் நடவடிக்கைகள் இதில் இருந்தே புரியவில்லையா?

பஞ்சாப் பொற்கோவிலுக்குள் கமாண்டோ படை நுழைந்த பிறகு ஏற்பட்ட கலவரம் நடந்து 25 ஆண்டுகள் கழி்தது கடந்த 2009ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்டார். இலங்கையில் 1983ம் ஆண்டில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதற்கு 20 ஆண்டுகள் கழித்து 2003ம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கா மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டதால் அங்கு வன்முறைகள் குறைந்ததா?

வெறுமனே மன்னி்ப்பு கேட்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை,மாறப்போவதில்லை. குஜராத் முதல்வர் தனது மாநிலத்தில் நடந்த கலவரத்திற்காக மன்னிப்பு கேட்காவிட்டாலும் மாநிலத்தை பல்வேறு துறைகளில் முன்னோடியாக்கியுள்ளார். கலவரத்தால் ஏற்பட்ட காயங்களை முன்னேற்றத்தால் தான் ஆற்ற முடியுமே தவிர வெறுமனே மன்னிப்பு கேட்பதால் எதுவும் ஆகப்போவதில்லை.

செய்திகளையும், மக்களின் கருத்துகளையும் நடுநிலையோடு கொடுக்க வேண்டியது ஊடகங்களின் கடமையாகும். ஆனால் குஜராத்தில் அப்படி நடப்பதில்லை என்பது கவலையளிப்பதாக உள்ளது. இந்த நிலை மாறி சமரசம் ஏற்பட ஊடகங்கள் உண்மையைத் திவர வேறு எதையும் வெளியிடக் கூடாது.

English summary
The cardinal rule of sections in the media is two bifurcate anything and everything as long as it proves the point. ‘Two Indias’, ‘Two As’ or ‘Two Bs’- a make believe distinction becomes the basis of a weak argument. It has been made to believe that there exist not one but 2 Gujarats. One is the shiny Ahmedabad, the Vibrant Gujarat and the other Gujarat that lives in ‘tiny unkempt Muslim lanes’.The reality is that there exists only one Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X