விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் ஜூலை 31-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான 'சிக்மா ஸ்டைல்' தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஆனால் இந்த பாடலை பற்றி பேசப்படுவது இசை அல்லது நடனம் மட்டுமல்ல. பாடலில் இடம்பெற்ற சில வரிகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளன.

Jason Sanjay Sigma Vijay Sandeep Kishan Rajinikanth Kollywood

அப்பாவை போலவே ஸ்டைலா?

பாடல் வீடியோவில் ஹீரோ சந்தீப் கிஷனுடன் இயக்குநர் ஜேசன் சஞ்சயும் நடனமாடியுள்ளார். பொதுவாக கேமராவுக்கு பின்னால் இருக்க விரும்பும் ஜேசன், இந்த முறை நேரடியாக திரையில் தோன்றியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதிலும் அவர் போட்டிருக்கும் ஸ்டெப்ஸ், உடல் மொழி, ஸ்கிரீன் பிரசென்ஸ் ஆகியவற்றை பார்த்த ரசிகர்கள், "அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் இருக்கிறார்", "விஜய் மாதிரி டான்ஸ் வரலன்னாலும் அந்த ஸ்டைல் இருக்கே!", "இயக்குநர் வேலையை விட்டுட்டு ஹீரோவா வாங்க" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், "ஜேசன் ஹீரோவாக வந்தால் தனி ரசிகர் கூட்டம் உருவாகிவிடும்" என்றும் கூறி வருகின்றனர்.

பேசுபொருளான பாடல் வரிகள்

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. "தகுதி தரம் பார்த்து பேசுறது இல்ல மாரல்...", "பதவி மேல ஆசை இல்லை...", "பொருள் பத்து விரல்..." என்ற வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

குறிப்பாக, தற்போது விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் சூழலில், "பதவி மேல ஆசை இல்லை" என்ற வரியை ஜேசன் சஞ்சயுடன் இணைத்து பலரும் விவாதித்து வருகின்றனர். ஒரு தரப்பினர், "இது வெறும் பாடல் வரிதான். அதில் அரசியல் தேட வேண்டாம்" என்கிறார்கள். மற்றொரு தரப்பினர், "முதல் பாடலிலேயே இப்படி ஒரு வரியா? இது சும்மா இருக்காது" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ரஜினி குறிப்பு இருக்கிறதா?

அதுமட்டுமல்லாமல், "வழி தனி வழி...", "அந்த ஆண்டவன் என் பக்கம்..." போன்ற வரிகளையும் ரசிகர்கள் தனியாக பகிர்ந்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரபல பன்ச் வசனங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த வரிகள் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"ஜேசன் தம்பி ரஜினி ரசிகரா?" என கேட்பவர்களும் இருக்கிறார்கள். ஏற்கனவே விஜய்யும் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் தான் ரசிகர் என்றும் ரஜினியை பார்த்து தான் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்ததாகவும் சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jason Sanjay Sigma Vijay Sandeep Kishan Rajinikanth Kollywood

தமிழ் குறைவு ஆங்கிலம் அதிகம்

பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தாலும், ஒரு சிறிய குறையையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாடல் மிகவும் வேகமாக செல்வதால் வரிகள் தெளிவாக புரியவில்லை என்றும், தமிழ் வார்த்தைகளை விட ஆங்கில வார்த்தைகள் அதிகமாக இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். "அடுத்த பாடலில் இன்னும் அதிக தமிழ் வேண்டும்" என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளம் வாரிசுகளின் ஆதரவு

பாடல் வெளியானதும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித், நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் ஜேசன் சஞ்சயை வாழ்த்தியுள்ளனர். "இது வெறும் ஆரம்பம் தான்" என்று துருவ் பதிவிட்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு பாடலிலேயே இவ்வளவு விவாதமா?

சாதாரணமாக ஒரு படத்தின் முதல் பாடல் வெளியானால் இசை, நடனம் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால் 'சிக்மா ஸ்டைல்' பாடலில் வந்த சில வரிகள், ஜேசன் சஞ்சயின் திரை தோற்றம், அவரது நடன அசைவுகள், அரசியல் குறியீடு தேடும் ரசிகர்கள் என பல காரணங்களால் இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இப்போது ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி.. "முதல் பாடலிலேயே இவ்வளவு பன்ச் என்றால், ஜேசன் சஞ்சய் இயக்கிய முழு படத்தில் இன்னும் என்னென்ன சர்ப்ரைஸ் இருக்கப் போகிறது?"என்பதுதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+