அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்எஸ்எஸ் பாணியில் அண்ணாமலை தொடங்க உள்ள அரசியல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்களே அவரின் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று அண்ணாமலை பேசி இருப்பது விவாதமாகி இருக்கிறது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

பாஜகவில் இருந்து விலகியுள்ள அண்ணாமலை, உடனடியாக இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த இயக்கத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி, பின்னர் அரசியல் கட்சியாக மாற்ற உள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அப்துல் கலாம் செண்டர் ஃபார் எத்திக்ஸ் அண்ட் பாலிட்டிக்ஸ் என்ற மையம் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Annamalai Annamalai Quits BJP Formally Launches Independent Movement with Strict RSS-Style Candidate Training

இந்த மையத்தில் முறையாக பயிற்சி வழங்கப்படும் என்றும், இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த கருத்து விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் அரசியல் பயிற்சி மையம் என்ற வாதம் ஆர்எஸ்எஸ் பாணியிலான ஸ்டைல்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணையும் அனைவரும், அந்த இயக்கம் சார்பாக நடத்தப்படும் பயிற்சி முகாமில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அப்படி பங்கேற்றால் மட்டுமே பொறுப்புகள் அளிக்கப்படும். அதே நபர்களுக்கு அரசு கட்டமைப்பில் பதவிகள் அளிக்க பரிந்துரை செய்யப்படும். பாஜகவிலும் பொறுப்புக்கு வர வேண்டும் என்றால் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் பங்கேற்பது கட்டாயம்.

இதனை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த ஆண்டு கூட பேசி இருந்தார். இதனால் அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையத்தை அண்ணாமலை தொடங்கவிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. அண்ணாமலையும் ஆர்எஸ்எஸ் பயிற்சியில் இருந்தவர்தான். இதனால் அதே பாணியை தனது அரசியல் கட்சிக்கும் பின்பற்றுகிறார் என்று பார்க்கப்படுகிறது.

இதனால் அண்ணாமலை உருவாக்க இருக்கும் அப்துல் கலாம் சென்டர் ஃபார் எத்திக்ஸ் அண்ட் பாலிட்டிக்ஸ் என்ற மையம், தமிழ்நாட்டிற்கான ஆர்எஸ்எஸ் பயிற்சி மையமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் அண்ணாமலை கட்சி தொடங்குவதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. பாஜகவுடன் கருத்து வேறுபாடு எழுந்தாலும், அக்கட்சியில் இருந்து விலகும் முடிவை அண்ணாமலை எடுக்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+