சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம்
சென்னை: சென்னையில் நாளை (06.06.2026) சனிக்கிழமை அன்று சோத்துப்பெரும்பேடு, பல்லாவரம், பஞ்செட்டி, தில்லை கங்கா நகர், ராமாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம் உட்பட) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மதியம் 2:00 மணிக்குள் பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் வழக்கம்போல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடுமின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"06.06.2026 சனிக்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்.

சென்னையில் 06.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:
சோத்துப்பெரும்பேடு: குமரன் நகர், செங்கலம்மன் நகர், வித்யாநல்லூர், சிறுனியம், பார்த்தசாரதி நகர், வித்யா கார்டன்.
பல்லாவரம்: பழைய சந்தை, பம்மல் பிரதான சாலை, அப்துல் பாரூக் தெரு, காமராஜர் நெடுஞ்சாலை, தெய்வசிகாமணி தெரு, முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், அரங்கநாதன் தெரு, தேவராஜன் தெரு, சோழன் தெரு, இஸ்ரோ விருந்தினர் மாளிகை, ரேடியன்ஸ்.
பஞ்செட்டி: தேர்வாய்கண்டிகை, சிப்காட், கோபால் ரெட்டி, பொன்னலூர், புதுநகர், கரடிபுத்தூர், பூதூர், என்.எம். கண்டிகை, கண்ணன்கோட்டை, பாஞ்சாலை, அமரம்பேடு, அக்ரஹாரம், தாணிப்பூண்டி, பெரியபுலியூர், சிறுவாடா, பூவம்பேடு.
தில்லை கங்கா நகர்: சரஸ்வதி நகர், கல்கி நகர், விநாயகபுரம், ஏஜிஎஸ் காலனி 4வது முதல் 10வது பிரதான சாலைகள் வரை, ஆண்டாள் நகர் 2வது மற்றும் 3வது பிரதான சாலைகள், எஸ்தெல் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகள், டிஆர்ஏ சல்மா அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ரெடிங்டன்.
ராமாபுரம்: ஐபிஎஸ் காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், ராமச்சந்திர நகர், கெருகம்பாக்கம், நெசப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவர் கட்
சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால்,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி வருகிறது. கோடைக்கால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அறிவிக்கப்படாத இந்த மின்தடை பொதுமக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் அம்பத்தூர் எஸ்.வி.நகர், கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம்,பானு நகர்,புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்று இரவு தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடர்பாக பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால்,முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கவில்லை தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் கள்ளிகுப்பத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு திரண்டு சென்று முற்றுகையிட்டு,போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒரு கட்டத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பணியில் இருந்த மின்வாரிய துறை அதிகாரிகளுடன்,நாங்கள் கரண்ட் பில் கட்றோம். தினந்தோறும் இரவு மின்வெட்டு ஏற்படுகிறது.குழந்தைகள் எப்படி தூங்கும்,உங்கள் பணியை சரியாக செய்யுங்கள் எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சில இளைஞர்கள் மின்சாரம் வரும் வரை அலுவலகத்தை விட்டு செல்லப் போவதில்லை என தெரிவித்தனர்.
குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாகக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள். மின்சாரம் எப்போது வரும்,எப்போது போகும் என்று தெரியாத நிலை நீடிப்பதால்,மறுநாள் வேலைக்குச் செல்வோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
-
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்














Click it and Unblock the Notifications