திருத்தணியில் பள்ளி மாணவன் கடத்தல்: ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

திருத்தணி: திருத்தணியில் பள்ளி மாணவனை கடத்தி வைத்துக் கொண்டு ரூ. 5 லட்சம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள விநாயகபுரத்தில் வசிப்பவர் சுப்பிரமணி. விவசாய கூலித் தொழிலாளி. அவரது மகன் சந்திரசேகர் (15). திருத்தணியில் உள்ள ராதாகிருஷ்ணன் அரசினர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி டியூஷனுக்கு சென்ற அவன் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் மகனை பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. உடனே இது குறித்து திருத்தணி போலீசில் சுப்பிரமணி புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப் பதிவு செய்து சந்திரகேரை வலை வீசித் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுப்பிரமணி செல்போனுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்கள் மகன் சந்திரசேகர் எங்களிடம் தான் உள்ளான். நீங்கள் ரூ.5 லட்சம் எங்களுக்கு கொடுத்தால் அவனை விட்டுவிடுகிறோம். பணம் தரவில்லை என்றால் உங்கள் மகன் உயிருக்கு ஆபத்து என மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இது குறித்து திருத்தணி காவல் நிலையத்தில் சுப்பிரமணி தகவல் கொடுத்தார். இதனையடுத்து அதிரடியாக விசாரணையில் இறங்கிய போலீசார் அந்த மர்ம நபர் திருப்பதியில் இருந்து போனில் பேசியதைக் கண்டு பிடித்தனர்.

இதனையடுத்து தனிப்படையினர் திருப்பதி விரைந்துள்ளனர். மாணவன் கடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+