சிபிஎம் மாநிலச் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

Subscribe to Oneindia Tamil

G Ramakrishnan
நாகப்பட்டினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக ஜி. ராமகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தமிழ்நாடு மாநில மாநாடு கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எஸ். ராமச்சந்திரன் பிள்ளை, கே.வரதராசன், பிருந்தா கரத், பி.வி.ராகவலு, மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என். சங்கரய்யா, மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., ஏ.கே.பத்மநாபன், உ. வாசுகி, சுதா சுந்தரராமன் உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் புதிதாக 79 பேர் கொண்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டு தலைமைக் குழு தலைவர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்ற மாநிலக்குழுக் கூட்டத்தில் மாநிலச் செயலாளராக ஜி. ராமகிருஷ்ணன் ஒரு மனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 15பேர் கொண்ட மாநில செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகளாக 49 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதே போல மாநில செயற்குழு உறுப்பினர்களாக ஜி. ராமகிருஷ்ணன் (செயலாளர்),டி.கே. ரங்கராஜன் எம்.பி., உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே.பாலகிருஷ்ணன், கே. தங்கவேல், செல்வசிங், எம்.என்.எஸ். வெங்கட்ராமன், என். சீனிவாசன், எஸ். நூர்முகமது, ஏ. லாசர், சண்முகம், என். குணசேகரன், க. கனகராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+