பத்மநாபசாமி கோவில்-தொடரும் பொற்குவியல் மதிப்பீட்டு பணி: 105 தங்க குடங்களின் பரிசோதனை நிறைவு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொற்குவியலில் உள்ள 105 தங்க குடங்களின் பரிசோதனை மற்றும் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன..
பொக்கிஷம்
திருவனந்தபுரம் கோவிலில் உள்ள 5 ரகசிய அறைகள் உச்சநீதிமன்ற உத்தரவுப் படி திறந்து பார்க்கப்பட்டது. அப்போது அந்த அறைகளுக் குள் ரூ.11/2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட அரிய வகை பொற்குவியல் இருப்பது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, அந்த அரிய பொக்கிஷங்களை டிஜிட்டல் முறைப்படி அதி நவீன உபகரணங்கள் உதவியுடன் துல்லியமாக மதிப்பிட்டு பட்டியல் தயாரிக்கும் பணிகள் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
'ஏ' முதல் 'எப்' வரை பெயரிடப்பட்டுள்ள 6 ரகசிய அறைகளில் முதலில் 'இ' மற்றும் 'எப்' என்ற இரு அறைகள் திறக்கப்பட்டு அங்கு இருந்த பொருட்கள் மதிப்பிடப்பட்டன.
அந்த ரகசிய அறைகளில் கோவில் தினசரி தேவைக்கான தங்கம் மற்றும் வெள்ளியிலான பாத் திரங்கள், குத்துவிளக்குகள், தட்டுகள் உள்ளிட்ட பொருட் கள் இருந்தன. இந்த பொருட் கள் பற்றிய தகவல்- விவரங் கள் 'சர்வர்' கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டன.
சி.டி அறைகள்
'சி' மற்றும் 'டி' என்று பெய ரிடப்பட்டுள்ள அறைகளை உச்சநீதிமன்ற அனுமதியுடன் திறந்தனர். இந்த இரண்டு அறைகளில் உள்ள பொருட்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த அறைகளுக்குள் கோவில் தினசரி தேவை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கான பொருட்கள் உள்ளன. அதில் தங்கத்திலான பெரிய குடங்கள் அடங்கும். இந்த அறையில் இருந்த 105 தங்கக் குடங்களின் மதிப்பீட்டு பணிகள் நேற்று முன்தினம் நிறை வடைந்தது.
ஒவ்வொரு குடமும் சுமார் 31/2 கிலோ எடை கொண் டவையாகும். இந்த குடங்களில் எண்கள் எழுதப்பட்டுள்ளன. 'மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் உள்ள எழுத்துக்களும் இவற்றில் உள்ளன. இது, குடங்களின் பழமை மற்றும் வரலாற்று முக்கியத் துவத்தை வெளிப்படுத்துகிறது.
இதை, பரிசோதனை மற்றும் மதிப்பீட்டு பணி களில் ஈடுபட்டுள்ள தொல்லியல் நிபுணர்கள் மொழி பெயர்த்து கம்ப்யூட்டரில் பதிவு செய்தனர். இவை, ஒரே தரத்திலான தங்கக்குடங்கள் என்பதால் பரிசோதனை பணிகள் விரைவாக நடந்தன. மொத்தம் 105 தங்கக்குடங்களின் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்தது.
3 இடங்கள் தேர்வு
பொற்குவியலை பாதுகாப்பதற்காக புதிய அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ரகசிய அறையை கோவிலில் அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் நிறைவடைந்தது. புதிய ரகசிய அறை அமைப்பதற்காக 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
'ஸ்ரீபண்டார நிலவறை' என்று கூறப்படும் 'ஏ' என பெயரிடப்பட்டுள்ள ரகசிய அறை அமைந்துள்ள இடத்தின் முன் பகுதியில், சந்தனம் அரைக்கப்பட்டு வரும் இடத்தில் இந்த புதிய அறை இடம் பெறுவதற்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளன. வருகிற 10-ந் தேதிக்குள் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்த புதிய ரகசிய அறை அமைப்பதற்கான மொத்த செலவுத்தொகை மற்றும் விரிவான திட்டத்தை வல்லுநர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள ரிசர்வ் வங்கி பிரதிநிதி விகாஸ் சர்மா தயாரித்து வருகிறார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications