இந்திய டிவி சேனல் அதிகாரியை கொலை செய்த பெண் உட்பட 3 பேருக்கு சிறை

லண்டனில் உள்ள சீக்கிய டிவி சேனலில் அதிகாரியாக இருந்தவர் ககன்தீப் சிங்(21). இவர் மருத்துவக் கல்லூரி மாணவியான முன்தில் கெளர் மகில்(20) என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகிலை, ககன்தீப் சிங் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதில் ககன்தீப் சிங்கை வெறுத்த மகில் அதன்பிறகு அவரிடம் இருந்து பிரிந்தார். ஆனால் அதன்பிறகும் ககன்தீப் சிங் தனது காதலி மகிலை சந்திக்க தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.
மேலும் இது குறித்து தனது நண்பர்கள் ஹர்விந்தர் ஷாகர்(20), டேரன் பீட்டர்ஸ்(20) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
இதில் மகிலின் மீது காதல் கொண்ட ஷாகர், ககன்தீப் சிங்கை பழிவாங்க போவதாக தெரிவித்தார். இது குறித்து மகில் தனது வீ்ட்டாரிடமும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ககன்தீப் சிங்கை கொலை செய்ய மகில், ஹர்விந்தர் ஷாகர், டேரன் பீட்டர்ஸ் ஆகியோர் திட்டமிட்டனர்.
அதன்படி ககன்தீப் சிங் உடன் மீண்டும் காதல் துளித்தது போல மகில் நடித்தார். அதன்பிற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி இரவு 11 மணிக்கு ககன்தீப் சிங்கை பிரைட்டனில் உள்ள தனது வீ்ட்டிற்கு வருமாறு மகில் அழைத்துள்ளார்.
அதனை நம்பிய ககன்தீப் சிங், பிக்லேஹியத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பிரைட்டனுக்கு காரில் சென்றுள்ளார். செல்லும் வழியில் தனது காதலி மகிலுக்கு பிடித்தமான கரடி பொம்மையை வாங்கி சென்றுள்ளார்.
முன்னதாக பிரைட்டன் ரயில் நிலையத்தில் ஷாகர், பீட்டர்ஸ் ஆகியோர் வரவேற்ற மகில் தனது வீட்டில் இருவரையும் தங்க வைத்திருந்தார். பிரைட்டனில் உள்ள மகிலின் வீ்ட்டிற்கு வந்த ககன்தீப் சிங்கை, அவர்கள் இருவரும் சேர்ந்து அடித்து உதைத்தனர். இதில் மயக்கமடைந்த ககன்தீப்சிங்கை அவர்கள் இருவரும் சேர்ந்து காரின் பின்பகுதியில் ஏற்றினர்.
பின்னர் ஷாகரும், பீ்ட்டர்சும் சேர்ந்து ககன்தீப் சிங் கிடத்தப்பட்ட காரை பிளாக்ஹித் என்ற இடத்திற்கு ஓடி சென்றனர். அங்கு காரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ கொளுத்தினர். தீயில் கார் எரிந்து வெடித்து சிதறிய சத்தம் கேட்டு, தீயணைப்புத் துறையினர் வந்தனர். தீயை அணைத்த பிறகு ககன்தீப் சிங்கின் உடலை காரில் இருந்து மீட்கப்பட்டது.
அதன்பிறகு போலீசாரை தொடர்பு கொண்டு ககன்தீப்சிங் தற்கொலை செய்து கொண்டதாக மகில் தெரிவித்தார். அதன்பிறகு துப்பறியும் நிபுணர்கள் உண்மையை கண்டறிந்தனர். இவ்வழக்கில் உண்மையை ஒப்புக் கொண்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
வழக்கு விசாரணை முடிவில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், திட்டமிட்டு கொலை செய்த ஷாகருக்கு குறைந்தபட்சம் 22 ஆண்டு சிறையும், அதற்கு உதவிய பீட்டருக்கு 12 ஆண்டுகள் சிறையும், மகிலுக்கு 6 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications