உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வராது: ராஜ்நாத் சிங்
லக்னோ: உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் அங்கு பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து கடந்த 3ம் தேதி தான் முடிந்தது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அங்கு பாஜக ஆட்சிக்கு வராது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
உத்தரபிரதேசத்தில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது. நாங்கள் நிச்சயமாக பல இடங்களை கைப்பற்றுவோம். ஆனால் ஆட்சியமைக்கும் அளவுக்கு எங்களிடம் பெரும்பான்மை இருக்காது. பகுஜன் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி பாஜக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் இருக்கிறது.
மாநிலத்தில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது மகிழ்ச்சியான விஷயம். இது பாஜகவுக்கு நல்லதாகவே அமையும். சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே, ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் செய்த பிரச்சாரத்தின் விளைவாகத் தான் மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்றார்.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications