'புயலும்' வேணாம், 'புரட்சிக் கலைஞரும்' வேணாம்..'அம்மா'விடம் சரணடைந்த மதிமுக, தேமுதிகவினர்!
சென்னை: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் அத்தொகுதியைச் சேர்ந்த மதிமுக நிர்வாகியும், நெல்லை மாவட்ட தேமுதிக பொதுக்குழு உறுப்பினரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
இடைத்தேர்தலையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சங்கரன்கோவிலில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் தனது மனைவி பிரேமலதாவுடன் சங்கரன்கோவிலில் வாக்கு சேகரிக்கிறார். தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் மதிமுக நிர்வாகி ஒருவரும், தேமுதிக நிர்வாகி ஒருவரும் அதிமுகவில் இணைந்துள்ளனர். இது இந்த 2 கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) சங்கரன்கோவில் தொகுதியைச் சேர்ந்த நெல்லை புறநகர் மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் எம்.மாரியப்பன், நெல்லை மாவட்ட தேமுதிக பொதுக்குழு உறுப்பினர் டி.வி.ஆர்.ரவி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அப்போது ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பி.ஆர்.நம்பிராஜ் (எ) எம்.ஜி.ஆர். நம்பியும் உடன் இருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications