உதயக்குமார் மனைவி நடத்தி வரும் பள்ளியின் காம்பவுண்ட் சுவர் திடீர் இடிப்பு
நாகர்கோவில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயக்குமாரின் மனைவி நடத்தி வரும் பள்ளிக்கூடத்தின் சுற்றுச் சுவரை சிலர் இடித்து விட்டனர். இதுகுறித்துப் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
உதயக்குமாரின் போராட்டத்தால்தான் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக ஒரு கருத்து கிளம்பியுள்ளதால், அவருக்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கு நடந்து வருகின்றன.
இந்த நிலையில், உதயகுமார் மற்றும் அவருடைய மனைவி மீரா ஆகியோர் நடத்தி வரும் பள்ளிக்கூடத்தின் சுற்றுச் சுவரை நேற்று முன்தினம் நள்ளிரவு யாரோ இடித்து தள்ளிவிட்டனர். இந்த பள்ளிக்கூடம் நாகர்கோவில் அருகே பழவிளையில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
இந்தப் பள்ளியின் சுற்றுச் சுவர் சிமென்ட் கற்களால் கட்டப்பட்டது. இதில் பக்கவாட்டு சுவரில் 50 அடி நீளத்திற்கு இடித்து விட்டனர். தகவல் அறிந்ததும் உதயக்குமாரின் மனைவி மீரா விரைந்து சென்று இடிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். பின்னர் தனது கணவருக்குத் தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் ராஜாக்கமங்கலம் போலீஸில் புகார் கொடுத்தார்.
அதில் சில இந்து அமைப்புகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications