மனைவியை மாடியில் இருந்து தள்ளிய கூடங்குளம் அணுமின்நிலைய டெக்னீசியனுக்கு 10 ஆண்டு சிறை
நெல்லை: மனைவியை மாடியில் இருந்து கீழே தள்ளிய கூடங்குளம் அணுமின் நிலைய டெக்னீசியனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து நெல்லை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சிவகிரி அருகேயுள்ள ராயகிரியைச் சேர்ந்தவர் தர்மர் மகன் வீமராஜா. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். அவரும், கூடங்குளத்தைச் சேர்ந்த ராணி என்பவரும் காதலித்து கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
வீமராஜா மனைவி, மகனுடன் கூடங்குளம் அணுவிஜய் நகரியத்தில் வசித்து வந்தார். ராணி அங்குள்ள வழிபாட்டு தலத்திற்கு செல்வதற்கு அவரது கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி ராணி தனது வீட்டின் பால்கனியில் நின்றார். அப்போது வீமராஜா கத்திரிக்கோலை வைத்து மனைவியின் தலைமுடியை வெட்ட முயன்றார். அதை தடுத்தபோது கத்திரிக்கோலால் ராணியின் கையிலும், நெற்றியிலும் குத்தினார்.
இதையடுத்து மனைவியை அவர் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் ராணி பலத்த காயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இது குறித்து ராணி கூடங்குளம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வீமராஜா, அவரது சகோதரி நெல்லை டவுனைச் சேர்ந்த விஜயா(38), அத்தான் வீரமணி(42) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை மகளிர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவசகாயம் குற்றம் சாட்டப்பட்ட வீமராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications