தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: திருப்பதி கோவிலை சுற்றி இரும்பு வேலி அமைக்க திட்டம்
திருப்பதி: தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலைச் சுற்றி ரூ. 3.80 கோடி செலவில் இரும்பு வேலி அமைக்க முடிவு செய்திருப்பதாக திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் எல்.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள புனிதத் தலங்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாட்டில் உள்ள முக்கிய புனிதத் தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு மத்திய உளவுத் துறையினர் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து நாட்டில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் எல்.வி.சுப்ரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான துணை அதிகாரி சீனிவாசராஜு, பாதுகாப்பு அதிகாரி எம்.கே.சிங், திருப்பதி புறநகர் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு எல்.வி.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனை தடுக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் மத்திய உளவுத் துறையிடம் இருந்து தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கோவிலைச் சுற்றி உள்ள 4 மாடவீதிகளிலும் இரும்பினாலான வேலி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி ரூ.3 கோடியே 80 லட்சம் செலவில் திருமலையின் 4 மாடவீதிகள் மட்டுமின்றி வனப்பகுதியிலும் இரும்பு வேலி அமைக்கப்படும். வரும் பிரம்மோற்சவ விழாவிற்குள் இரும்பு வேலி அமைக்கும் பணி நிறைவடையும்.
இரும்பு வேலியின் நடுவே 7 இடங்களில் பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக வழி (சப்த துவாரங்கள்) அமைக்கப்படும். இந்த 7 வழிகளிலும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டறியும் மெட்டல் டிடக்டர்' கருவிகளும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும்.
மேலும் 4 மாடவீதிகளின் ஒவ்வொரு மூலையிலும் அவசர கால கதவுகள் அமைக்கப்படும். இரும்பு வேலியினால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications