ஜெட் ஏர்வேஸிலும் சம்பள பாக்கி விவகாரம்: விமானிகள் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Jet Airways
மும்பை: தங்களுக்கான ஊதியத்தை வழங்காதது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள் அந்நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயலை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தெற்கு மும்பையில் உள்ள நரேஷ் கோயல் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக இச்சந்திப்பின் போது விமானிகளிடம் நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஆனால் நரேஷ் கோயலின் வாதத்தை நிராகரித்த விமானிகள், பங்குச் சந்தையில் ஜெட் ஏர்வேஸின் பங்குகளின் மதிப்பு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டினர்.

தங்களுக்கான ஊதியத்தை வழங்காததைக் கண்டித்து புதன்கிழமையன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்தே சந்திப்பு நடைபெற்றது.

"நாங்க என்ன கொடுக்கக்கூடாதுன்னா நினைக்கிறோம். சம்பளம் கொடுக்க பணம் இல்லை" என்ற நரேஷ் கோயலின் விளக்கத்தால் விமானிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

2009-ம் ஆண்டு இதேபோல் விவகாரம் ஏற்பட்டபோது ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை விமானிகள் பணிய வைத்திருந்ததை சுட்டிக்காட்டும் அவர்கள், எங்களது பொறுமைக்கும் எல்லை இருக்கிறது என்றும் எச்சரித்துள்ளனர்.

மிகக் குறைவான ஊதியம் பெறுவோருக்கு 5-ந் தேதியே ஜெட்வேர்ஸ் வழங்கிவிடுகிறது. ஆனால் அதிகம் ஊதியம் பெறுவோருக்கான தொகையை 5-ந் தேதியிலிருந்து 7-ந் தேதிக்கு மாற்றியது. அடுத்த மாதம் 7ந் தேதியிலிருந்து 15-ந் தேதிக்கு மாற்றியது. பிறகு 20-ந் தேதி என இழுத்தடிப்பு செய்து வருகிறது.

ஏற்கெனவே கிங்பிஷர் நிறுவனம் நிதிநெருக்கடியில் அல்லாடி கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸிலும் நிதிவிவகாரம் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+