அதிமுகவுக்கு திடீர் ஆதரவு ஏன்?- புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சொல்லும் 'புது' விளக்கம்!

பரமகுடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அதிமுக அரசுக்கு எதிரான நிலையை எடுத்தார் கிருஷ்ணசாமி. இந் நிலையில் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திடீரென அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். இதை தலித் மக்கள் ரசிக்கவில்லை. கிருஷ்ணசாமியை அதிமுக 'கவனித்துவிட்டேதோ' என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
நேற்று இலவன்குளம் கிராமத்தில் தலித் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய சென்ற அவரை அப்பகுதி புறக்கணித்தனர். நாங்கள் இருப்பது தேர்தல் நேரத்தில் மட்டும் தான் உங்களுக்கு தெரியுமா, மற்ற நேரங்களில் எங்களை உங்களுக்கு தெரியவில்லையா, இப்போது மட்டும் ஏன் ஓட்டு கேட்க வந்தீர்கள், நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கூறி அனைவரும் வீ்ட்டிற்குள் சென்றனர். இதையடுத்து கிருஷ்ணசாமி பிரச்சாரத்தை கைவிட்டு திரும்பிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் அதிமுகவை ஆதரிப்பது ஏன் என்பதற்கு ஒரு மாபெரும் விளக்கத்தை கிருஷ்ணசாமி தந்தார். இது குறித்து நிருபர்களிடம் பேசிய அவர்,
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் கிராமங்கள்தோறும் சென்று ஆதரவு திரட்டுகிறார்கள்.
1996ம் ஆண்டு முதல் நாம் திமுகவுக்கு ஆதரவு அளித்து வந்தோம். தென் தமிழகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அனைவரையும் தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவிக்கக் கோரி சட்டசபையில் குரல் எழுப்பினேன். அதை திமுக நிறைவேற்றவில்லை. இப்போது இந்தக் கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் வைத்துள்ளோம். எனவே, நம் மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் நம் கோரிக்கைகளை சட்டசபையில் வலியுறுத்த முடியும்.
கடந்த திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒரு பிரிவினருக்கு உள்ஒதுக்கீடாக கொடுத்ததால் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினருக்கான வாய்ப்புகள் பறிக்கப்பட்டன.
சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடுவதற்குத் தயங்கவில்லை. ஏற்கெனவே 5 முறை இத் தொகுதியில் போட்டியிட்டு எங்கள் பலத்தை நிரூபித்திருக்கிறோம். மேற்கொண்டு நிரூபிக்க வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை. இத் தேர்தலுக்குப் பின்னரும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றே நம்புகிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications