கூடங்குளம் பகுதியில் அமைதியை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை: டிஐஜி எச்சரிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு பணிக்கு செல்லும் ஊழியர்களை தடுத்தல், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் பீதியை உருவாக்குதல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக உதயகுமார், புஷ்பராயன், சிவசுப்பிரமணியன், ஜேசுராஜ், ராஜலிங்கம், சகாய இனிதா, மெல்பிரட், அகிலம், ஜெரால்ட், ஜேம்ஸ் உள்ளி்ட்ட பலர் மீது பல்வேறு வழக்குகள் கூடங்குளம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிகளை தொடங்க கடந்த 19ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையிலும் கூடங்குளம் மற்றும் கடலோர கிராமங்களில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதற்காக சிவசுப்பிரமணியன் உள்பட 11 பேரும், கூட்டப்புளியில் சட்டவிரோதமாக பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட 12 பெண்கள் உள்பட 178 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உதயகுமார் உள்ளிட்டோர் அப்பகுதி மக்களைத் தூண்டி விட்டு கடலோர கிராமங்களில் அமைதியை சீர் குலைத்து வருகின்றனர். கடலோர கிராமங்களில் ஏப்ரல் 2ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட விரோதமாக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications