நெல்லை-தென்காசி அகல பாதையி்ல் 26ந் தேதி ரயில் சோதனை ஓட்டம்
திருநெல்வேலி: நெல்லை-தென்காசி அகல ரயில் பாதையில் வரும் 26ந் தேதி சோதனை ஓட்ட ரயில் இயக்கப்படவுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது..
நெல்லை-தென்காசி
நெல்லை-தென்காசி மீட்டர்கேஜ் பாதையில் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து 220 கோடி ரூபாயில் நெல்லை-தென்காசி இடையேயான 72 கிமீ தூரமுள்ள மீட்டர்கேஜ் பாதை அகல பாதையாக மாற்றும பணி கடந்த மூன்று ஆண்டாக நடைபெற்று வந்தது. இதில் பெரிய மற்றும் சிறிய பாலங்கள், லெவல் கிராசிங், ஸ்டேஷன்களில் அடிப்படை வசதி, சிக்னல்கள், தண்டவாள பேக்கிங், உள்பட பல்வேறு பணிகள் நடந்தன. இதனையடுத்து கடந்த பிப்ரவரியில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் கோயல் ஆய்வு செய்தார். அப்போது சிறிய, பெரிய தவறுகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த 5ந் தேதி நெல்லை-தென்காசி அகல ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அது திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே வரும் 26ந் தேதி நெல்லை-தென்காசி அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனால் இந்த ரயில் பாதையில் செல்ல கூடிய பொதுமக்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் 26ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தண்டவாளத்திற்கு அருகே செல்வதை தவிர்க வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications