'மச்சினிச்சி'யைக் கொலை செய்து விட்டு எஸ்கேப் ஆன 'அத்தான்' கைது!
சென்னை: சென்னை அருகே திருமுல்லைவாயலில் கள்ளக்காதலால் ஏற்பட்ட தகராறில் மைத்துனியை கொலை செய்த அக்கா கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆவடி அருகே திருமுல்லைவாயல் கலைஞர் நகர் 2வது மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் கல்பனா (21). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐடி கம்பெனியில் துப்புரவு சூபர்வைசராக பணியாற்றி வந்தார். இவரது அக்கா கணவர் சரவணனுடன் இவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால், இவரது கல்பனாவின் கணவர் மகேஷ்பாபு பிரிந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையே, தம்முடன் வேலை செய்யும் ஒருவரை 2வது திருமணம் செய்ய கல்பனா முடிவு செய்தார். இதற்கு சரவணன் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரவணன், கல்பனாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பினார்.
இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடிவந்தனர். சரணவன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
போலீசில் சரவணன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
கல்பனா அழகாக இருப்பாள். அவள் மீது எனக்கு மோகம் ஏற்பட்டது. எப்படியாவது அவளை அடைய வேண்டும் என நினைத்தேன். அதற்குள் அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
அதன்பிறகும் கல்பனாவை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு போவேன். அப்போது இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவரை பிரிந்த கல்பனா, 2வது திருமணம் செய்ய முயன்றார்.
எனக்கு ஆசை நாயகியாக தொடர்ந்து இருக்கும்படி கூறினேன். மறுத்ததால் அவளை கொலை செய்துவிட்டு தப்பினேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சரவணனை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications