ராமெஜயம் குடும்பத்தாருக்கு க. அன்பழகன், தயாளுஅம்மாள், செல்வி ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

K Anbazhagan and Dayalu Ammal
திருச்சி: படுகொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயத்தின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 29ம் தேதி காலை வாக்கிங் போனவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

திருச்சியில் பெரும்புள்ளியாக இருந்த ராமஜெயம் திடீர் என்று கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி, மருமகன் மற்றும் எல். கணேசன் ஆகியோர் இன்று திருச்சியில் உள்ள ராமஜெயத்தின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு அவர்கள் ராமஜெயத்தின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேரு மற்றும் ராமஜெயத்தின் மனைவிக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+