புதுக்கோட்டை எம்.எல்.ஏ மரணம்- அஞ்சலிக்குப் பின் நாளை சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை: புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ முத்துக்குமரன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து நாளை, சட்டசபையில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. முத்துக்குமரன் இன்று காலை அன்னவாசல் பகுதியில் மரணம் அடைந்த கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் பழனிச்சாமி என்பவர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசலுக்கு காரில் சென்றார்.
அன்னவாசலை அடுத்து சொக்கநாதன்பட்டி அருகே ஆரியூர் என்ற இடத்தில் கார் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. டிரைவர் காரை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இறுதியில் அந்த கார் ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காருக்குள் இடிபாடுகளில் சிக்கி முத்துக்குமரன் எம்.எல்.ஏ. பரிதாபமாக இறந்தார்.
எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் பலியானதை தொடர்ந்து நாளை காலை சட்டசபை கூடியதும் அவருக்கு இரங்கல் தெரிவித்து உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பிறகு சட்டசபை அன்று ஒத்தி வைக்கப்பட்டு மறுநாள் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications