எஸ்எஸ் மியூசிக் டிவி-லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது மேலும் ஒரு நில மோசடி வழக்கு: ஜெயிலேயே கைது
கோவை: லாட்டரி அதிபரும் எஸ்எஸ் மியூசிக் டிவி சேனல் அதிபருமான மார்ட்டின் மீது இன்னொரு நில மோசடி வழக்கு பாய்ந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி வியாபாரி மார்ட்டின். இவர் கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். இதன்மூலம் அரசு அதிகாரிகளின் வட்டாரத்தை சாதகமாக பயன்படுத்தி பெரும் பயன் அடைந்து வந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நில மோசடி வழக்கு தொடர்பாக மார்ட்டின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது மேலும் பல வழக்குகள் பாய்ந்தன.
இந் நிலையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்குமாறு கோவை கலெக்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டார். ஆனால். இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந் நிலையில் கோவை அருகே எலச்சிப்பாளையத்தை சேர்ந்த சென்னியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மார்ட்டின் மீது புதிய வழக்கு பாய்ந்துள்ளது.
சென்னியப்பன் கொடுத்த புகாரில், எனக்கு எலச்சிப்பாளையத்தில் 5.41 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை கடந்த 2006ம் ஆண்டு கோவையை சேர்ந்த மார்ட்டினும், கருமத்தம்பட்டி புதூரை சேர்ந்த நடராஜன், ராமசாமி ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்து விட்டனர். திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பட்டா மாறுதல் செய்ய முயற்சி செய்தனர் என்று கூறப்பட்டிருந்தது.
தற்போது பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்ட்டினை கருமத்தம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை அவினாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும் படி மாஜிஸ்திரேட் இந்திராணி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மார்ட்டின் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மார்ட்டின் தான் பிரபலமான தென் இந்திய இசை சேனலான எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியின் உரிமையாளர் ஆவார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications