இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழுவில் அதிமுகவின் ரபி பெர்னார்ட்!

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், ஏப்ரல் 16ம் தேதி இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை செல்கிறது. தமிழர் பகுதிகளை இக்குழு பார்வையிடவுள்ளது. இக்குழுவினர் 25ம் தேதி வரை இலங்கையில் இருப்பார்கள்.
இக்குழுவில் பாஜக சார்பில் சுஷ்மா தவிர வெங்கையா நாயுடு இடம் பெறுகிறார். அதேபோல திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் என்எஸ்வி சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக் தாகூர், கிருஷ்ணசாமி ஆகியோர் இடம் பெறுகிறார்கள். இவர்கள் தவிர வட இந்திய எம்.பிக்கள் சிலரும் இடம் பெறுகின்றனர்.
ஆனால் மதிமுக, சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை இக்குழுவில் சேர்க்கவில்லை மத்திய அரசு. இலங்கையின் நிர்ப்பந்தம் மற்றும் நிபந்தனை காரணமாகவே இவர்களை மத்திய அரசு குழுவில் இணைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல அதிமுகவும் இக்குழுவில் இடம் பெறுமா என்பதில் சந்தேகம் நிலவி வந்தது. காரணம், ராஜபக்சே அரசுக்கு எதிராக தீவிரமான போக்கில் இருந்து வருபவர் ஜெயலலிதா என்பதால் அக்கட்சி சார்பில் பிரதிநிதி செல்வாரா என்பது குழப்பமாகவே இருந்தது.
ஆனால் தற்போது அதிமுக சார்பில் ரபி பெர்னார்ட் செல்வார் என்று கூறப்படுகிறது. ரபி பெர்னார்ட் பங்கேற்பது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்திற்கு அதிமுக தலைமை ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
சிபிஐக்கு அழைப்பு அனுப்பப்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசு. அக்கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன் இலங்கை செல்லும் குழுவில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications