பாடப் புத்தகங்களில் கார்ல் மார்க்ஸ் பற்றிய பகுதிகளை நீக்க மமதா அரசு நடவடிக்கை

இது தொடர்பாக மேற்கு வங்க பாடப்புத்தக சீரமைப்புக் குழுத் தலைவர் அவிக் மஜூம்தார் கூறியுள்ளதாவது:
மேற்கு வங்கத்தில் வரலாற்றுப் பாடங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட தத்துவத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளது. என்ன நடந்தது என்பது மட்டுமே வரலாறு ஆகாது. அதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதும்கூட முக்கியம்.
இப்படி ஒரு சார்பாக இல்லாமல் சமநிலையாக காந்தி, நெல்சன் மண்டேலோ போன்றோர் பற்றிய பாடங்களை அறிமுகப்படுத்தும்போது தேவைப்படும் இடங்களில் மார்க்ஸ் பற்றிய குறிப்புகளும் இடம்பெறும் என்றார் அவர்.
இச்சீரமைப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரியன், வரலாறு என்பது "ரசியப் புரட்சியாளர்களிடத்திலோ ஜோதிபாசுகளிடமோ அல்லது புத்ததேவ் பட்டாச்சார்யாக்களிடமோ தொடங்கி முடிந்துபோய்விடுவதில்லை.." என்று காட்டமாக கூறியுள்ளார்.
சோம்நாத் கடும் எதிர்ப்பு
மமதா பானர்ஜி அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு நாடாளுமன்ற முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், "மமதா பானர்ஜிக்கு யார் இப்படி ஒரு யோசனையை தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை..ரஷியப் புரட்சியைப் பற்றியோ கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் பற்றியோ படித்துவிட்டாலே அனைவரும் கம்யூனிஸ்டுகளாக மாறிவிடப் போவதில்லை. இத்தகைய ஒரு நடவடிக்கை மிகவும் தவறானது. இது தேவையில்லாத ஒன்று என்றார் அவர்.
அதே நேரத்தில் மாநில அரசின் முடிவை விமர்சிக்கும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், தொழில்புரட்சியைப் பற்றி பாடம் நடத்தும்போது கார்ல் மார்க்ஸ் பெயரை உச்சரிக்காமல் எப்படி நடத்த முடியும் என்கின்றனர்.
அரசுகள் மாறும்போது பள்ளிப் பாடப் புத்தகங்களை தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி அமைப்பது என்பது மாநில வேறுபாடின்றி கட்சிகள் கடைபிடிக்கும் பொது அணுகுமுறையாக இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள் என்பதுதான் உண்மையும்கூட.
-
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications