'சும்மா மிரட்ட வேண்டாம்; தென் சீனக் கடல் உலகின் பொது சொத்து!'- இந்தியா பதிலடி

சீனாவின் தெற்கு கடல் பகுதியில் 52 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளும், அந்தக் கடல் பகுதியும் தங்களுக்கு சொந்தம் என்று சீனா கூறுகிறது. ஆனால், தங்களுக்குத்தான் சொந்தம் என்று வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பாக மேற்கண்ட 4 நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.
அந்த கடல் பகுதியில் இந்தியாவின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், விதேஷ் நிறுவனம் ஆகியவை வியட்நாம் நாட்டுடன் சேர்ந்து கடந்த மாதம் முதல் எண்ணெய் ஆய்வு நடத்தி வருகின்றன. பிரச்சினைக்குரிய வியட்நாம் நாட்டுடன் சேர்ந்து இந்தியா ஆய்வு செய்வதால், வியட்நாம் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதாக கருதி, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுக்கு மிரட்டலும் விடுத்தது.
எஸ்.எம்.கிருஷ்ணா
இந்தநிலையில், பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது.
அவர் கூறுகையில், "தெற்கு சீன கடல் பகுதிகள் அனைத்தும் உலகத்தின் சொத்து. தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஏசியன்) இதை ஏற்றுக் கொண்டுள்ளன. சீனாவும் இந்த கருத்தை ஏற்றுள்ளது.
தெற்கு சீன கடல் பகுதிகள், வளர்ந்து வரும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அங்கு எந்த ஒரு நாட்டின் தலையீடும் இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.
இந்த விவகாரத்தில் இந்திய-சீன பரஸ்பர உறவில் எந்த பாதிப்பும் நிச்சயமாக இல்லை. சீன அதிபர் ஹு ஜின்டாவோ, 'பிரிக்ஸ்' மாநாட்டுக்காக சமீபத்தில் இந்தியா வந்தார். அவருடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாகவே இருந்தது," என்றார்.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications