பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: தமிழ்நாட்டில் 29 பேர் அனுமதி – சுகாதார அமைச்சர்
சென்னை: தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 29 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பரவிவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹெச்1என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பன்றிக் காய்ச்சல் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் நோய் பாதித்து 260க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புனேயில் இருந்து 8 அண்டை மாநிலங்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. தற்போது தமிழ்நாடு, ஆந்திராவிலும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், சென்னையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 29 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த வாரம் திருப்பூர் மாவட்டத்தில் 75 வயதுடைய பெரியவர் ஒருவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் 26 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கால்டாக்ஸி டிரைவர் ரமேஷ் (வயது 22) என்ற இளைஞர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க ரயில் நிலையங்கள், விமானநிலையங்களிலும், மாநிலத்தின் எல்லைப்பகுதிகளிலும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜய் கூறினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications