தாயிடம் தவறாக நடந்த இளைஞன் தலையில் கல்லைப் போட்ட மகன் கைது!
சென்னை: கண்ணெதிரே தாயை மானபங்கப்படுத்தியவன் தலையில் கல்லைத் தூக்கிப் போட்ட மகனை போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சாலையில் உள்ள நடைபாதையில் வசித்து வருபவர் ஏழைப் பெண்மணி கோமதி (47). கட்டுமான கூலி தொழிலாளி. இவர் தனது மகன் காண்டீபனுடன் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு 1 மணிக்கு எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த டெல்லி பாபு (36) என்ற வாலிபர் அந்த வழியாக வந்தார்.
நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த கோமதியை பார்த்ததும் அருகில் சென்ற பாபு, கோமதியிடம் சில்மிஷம் செய்தார். இதனால் திடுக்கிட்டு விழித்த கோமதி வாலிபர் ஒருவர் அருகில் அமர்ந்திருப்பதை பார்த்து கூச்சலிட்டார். உடனே விழித்தெழுந்த காண்டீபன், தாயிடம் சில்மிஷம் செய்த வாலிபர் டெல்லி பாபுவுடன் சண்டை போட்டார்.
அருகில் கிடந்த பெரிய கல்லை தூக்கி டெல்லிபாபுவின் தலையில் போட்டார். இதில் டெல்லி பாபு மண்டை உடைந்தது. உடனே கோடம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பெண்ணை மானபங்கம் செய்ததாக டெல்லி பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தாயின் மானத்தைக் காக்க கல்லைத் தூக்கிய காண்டீபன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கு அந்தப் பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, காண்டீபனை விடுவிக்கக் கோரினர். ஆனால் போலீசார் விடவில்லை.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications