கமுதி அருகே அதிமுகவினரிடையே மோதல்- அரிவாள் வெட்டு
கமுதி: கமுதி அருகே உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த இரு கோஷ்டியினர் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது..
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இலந்தைக்குளம் அதிமுக ஊராட்சி தலைவராக இருப்பவர் இருளன். கமுதி ஊராட்சி ஒன்றியம் 10 வது வார்டு கொல்லங்குளம் அதிமுக கவுன்சிலராக இருப்பவர் முத்துராமலிங்கம். இவர்களுக்கு இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இலந்தைகுளம் கண்மாயில் உள்ள காட்டு கருவேல மரங்களை இருளன் தரப்பை சேர்ந்த முருகேசன் வெட்டியுள்ளார். இதனை முத்துராமலிங்கம் தரப்பை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தடுத்துள்ளார். இதனால் இரு தரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிவடைந்துள்ளது. ஏற்பட்டுள்ளது.
இது குறித்த புகாரின் பேரில், 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த விவகாரத்தில் தலைமறைவான ஒன்றிய கவுன்சிலர் முத்துராமலிங்கம் தரப்பினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே இருளன் தரப்பை சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் சென்று கிருஷ்ணன் வீட்டை அடித்து உடைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலந்தைக் குளத்தில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications