தேமுதிக அலுவலகத்தை இடிக்க நோட்டீஸ்: மதுரை மாநகராட்சிக்கு விஜயகாந்த் பதில்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 1 கிமீ தூரத்திற்கு 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது என்று 1997ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை கண்டுகொள்ளாமல் கோவிலைச் சுற்றி பல உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் இடிக்க மதுரை கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார்.
அதன்படி விதிகளை மீறி கட்டப்பட்ட 790 கட்டிடங்களை இடிக்க மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. மேல ஆவணி மூல வீதியில் உள்ள 3 அடுக்கு தேமுதிக கட்சி அலுவலகக் கட்டிடத்தையும் இடிக்குமாறு மதுரை மாநகராட்சி அக்கட்சியின் தலைவர் விஜயகாந்திற்கு கடந்த 15ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு விஜயகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் பாண்டியன், சேவுகராஜா, காசிமாயன் ஆகியோர் மதுரை மாநகராட்சி கமிஷனிரடம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது,
* எமது கட்சிக்காரர் (விஜயகாந்த்) மேல ஆவணி மூல வீதியில் உள்ள கட்டிடத்தை கடந்த 1987ம் ஆண்டு அதன் உரிமையாளர் சோலைராணி என்பவரிடம் இருந்து கிரையம் பெற்று அனுபவித்து வருகிறார். அதில் இருந்து இந்த கட்டிடம் கடந்த 1987ம் ஆண்டுக்கு முன்பே கட்டப்பட்டது என்றும், விஜயகாந்தால் கட்டப்பட்டதல்ல என்பதும் தெளிவாகிறது.
* மதுரை மாநகராட்சி அறிவிப்பில் காட்டப்பட்டுள்ள அரசாணை எண் 164, தேதி 15-06-1994 மற்றும் அரசாணை எண் 22 தேதி 30-01-1997 ஆகிய 2 அரசாணைகளுமே, விஜயகாந்த் கட்டிடத்தை கிரையம் செய்ததற்கு பின்பு பிறப்பிக்கபட்டதாகும். எனவே இந்த கட்டிடம் விதியை மீறி கட்டப்பட்டது என்று கூறுவது உள்நோக்கம் கொண்டதாகும்.
இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகும்கூட இதுவரை விஜயகாந்துக்கோ அல்லது இதுபோன்ற மற்ற நபர்களுக்கோ அல்லது பொதுவான முறையிலோ மாநகராட்சி நிர்வாகத்தால் எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை.
எனவே இது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கொடுக்கப்பட்ட அறிவிப்பாகவே தெரிகிறது. எனவே சட்டத்திற்கு முரணாக, விஜயகாந்துக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசை உடனடியாக மாநகராட்சி திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.
மாநகராட்சியின் நோட்டீசில் கூறியுள்ளபடி, விஜயகாந்த் கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் இதனை மீறி கட்டிடத்தின் மீது நடவடிக்கை ஏதும் மேற்கொண்டால் அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications