வேலூர் கோர்ட்டில் ரவுடியை ஓட, ஓட விரட்டி வெட்டிய 4 பேர்: வழக்கறிஞர்கள் போராட்டம்
வேலூர்: வேலூர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு கும்பல் பிரபல ரவுடி ஜெகநாதனை ஓட, ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜெகன் என்ற ஜெகநாதன் (24). அவன் மீது பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அவன் ஒரு வழக்கில் ஆஜராவதற்காக இன்று காலை சத்துவாச்சாரி நீதிமன்றத்திற்கு வந்தான். நீதிமன்றம் முன்பு உள்ள ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு கார் ஒன்று வந்தது. அதில் இருந்து கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் இறங்கினர்.
இதைப் பார்த்த ஜெகன் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க முயன்றான். ஆனால் அந்த 4 பேரும் அவனை நீதிமன்றத்திலேயே ஓட, ஓட விரட்டி கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் உள்ள ஒரு அறைக்குள் புகுந்த ஜெகனை அங்கும் விடாமல் வந்து வெட்டினர். இதில் அறை முழுவதும் ரத்தக்காடானது.
அதன் பிறகு அந்த 4 பேரும் சாவகாசமாக நடந்து சென்று தப்பிவிட்டனர். இதைப் பார்த்த வழக்கறிஞர்களும், பொதுமக்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த ரவுடியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வழக்கறிஞர்கள் தலைவர் ஜெயகுமார் கூறுகையில்,
வேலூர் நீதிமன்ற வளாகத்தில் முதன்முறையாக கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பை உறுதிபடுத்தும் வரையில் நீதிமன்றத்தை புறக்கணிப்போம். இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications