திஹாருக்குப் போன பிறகு முதல் முறையாக மைக் பிடிக்க வரும் கனிமொழி!

2010ம் ஆண்டு கனிமொழியும், அதிகார தரகர் நீரா ராடியாவும் பேசியதன் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின பின்னர் கனிமொழியின் பெயர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அடிபட்டது. இந்த விவகாரத்தில் முதலில் 2011ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி ராஜா கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து கனிமொழி இயக்குநராக உள்ள என்ஜிஓ அமைப்பான தமிழ் மையத்தின் அலுவலகம் வருமான வரி சோதனைக்குள்ளானது. அதன் பின்னர் 2011, மார்ச் 11ம் தேதி சிபிஐ விசாரணைக்குள்ளானார் கனிமொழி. கலைஞர் டிவிக்கு சாஹித் பல்வாவின் டிபி ரியால்டி நிறுவனம் ரூ. 200 கோடி கொடுத்தது தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்றது. இந்தப் பணத்தை கடனாக வாங்கியதாக கலைஞர் டிவி கூறியது. ஆனால் இது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம்தான் என்றுகூறியது சிபிஐ.
இந்த நிலையில் சிபிஐயின் 2வது குற்றப்பத்திரிக்கையில் கனிமொழியின் பெயர் சேர்க்கபப்ட்டது. இதையடுத்து 2011, மே 20ம் தேதி டெல்லி சிபிஐ கோர்ட், கனிமொழியைக் கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து கனிமொழியும், கலைஞர் டிவி தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டனர். இருவரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய பின்னர் கனிமொழி திமுக மேடையில் எதிலும் கலந்து கொள்ளவில்லை. எங்கும் பேசவில்லை. 2011 நவம்பர் 28ம் தேதி கனிமொவிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு வழியாக ஜாமீன் வழங்கியது.
ஜாமீ்னில் வெளியே வந்த பிறகும் கூட திமுகவின் எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார் கனிமொழி. திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் மட்டுமே பங்கேற்றார்.
இந்த நிலையில், இன்று முதல் முறையாக திமுக மேடையேறுகிறார். அதிமுக அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் ஒன்றாக, திருவொற்றியூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டு பேசவுள்ளார்.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications