மாணவர்கள் தயாரிக்கும் செயற்கைக் கோளை இஸ்ரோ ஏவும்: மயில்சாமி அண்ணாதுரை
Subscribe to Oneindia Tamil

சோழிங்கநல்லூர் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அறிவியல் தொழில்நுட்ப விருது வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது:
விண்வெளித்துறையில் மாணவர்களின் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் வகையில், இந்திய விண்வெளி ஆய்வு மையம் வழிகாட்டுதலுடன் சிறு செயற்கைக் கோள்களை உருவாக்கும் பணியில் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் மும்பை ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிவரும் செயற்கைக்கோள்களுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இவற்றை இறுதி ஆய்வுகளுக்குப்பின் விரைவில் விண்ணில் ஏவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் மயில்சாமி அண்ணாதுரை.












Click it and Unblock the Notifications