கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்!

ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயகாந்த். நேரம் கிடைக்கும்போது தொகுதிக்குப் போவது அவரது வழக்கம். அந்த வகையில் கடந்த 12ம் தேதி ரிஷிவந்தியம் சென்ற அவர் தொகுதியைச் சுற்றிப் பார்த்து மக்களிடம் குறைகளைக் கேட்டார், மனுக்கள் பெற்றார்.
அப்போது பல்வேறு குறைபாடுகளை குறிப்பாக குடிநீர்ப் பிரச்சினை குறித்து மக்கள் அவரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து தற்போது குடிநீர்ப் பிரச்சினையை ஓரளவுக்காவது தீர்க்க ஏற்பாடு செய்துள்ளார் விஜயகாந்த். அதாவது தனது சொந்தச் செல்வில் சென்னையிலிருந்து லாரி மூலம் குடிநீரை அனுப்பி அதை தொகுதியில் சப்ளை செய்யச் சொல்லியுள்ளார் விஜயகாந்த். அதன்படி குடிநீர் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
அரசை எதிர்பாராமல் கைக்காசைப் போட்டு குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு செய்த விஜயகாந்த்துக்கு தொகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.-












Click it and Unblock the Notifications