இந்த சின்னம்தான் வேண்டும் என்று வலியுறுத்த உரிமை இல்லை-தேமுதிக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

தேமுதிக மட்டுமல்லாமல், விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் தாக்கல் செய்திருந்த மொத்த மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் இந்தக் கட்சிகளுக்கு எதிர்காலத்தில் சின்னம் தொடர்பாக பெரும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக இந்தக் கட்சிகள் தங்களுக்கு இந்தந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தன. இதையடுத்து தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு மட்டும் இடைக்காலமாக இவர்கள் கேட்ட சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேமுதிக கட்சி சார்பில் முரசு சின்னம் கேட்டிருந்தனர். அது ஒதுக்கப்பட்டது. தேர்தலில் அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் முரசு சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் 3 பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.
3 நீதிபதிகளில் 2 பேர் தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி அத்தனை மனுக்களையும் டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்தனர். நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்து கூறுகையில், தேர்தல் சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் சரியானவையே. கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் யாரும் உரிமை கோர முடியாது என்று கூறி மனுக்களை டிஸ்மிஸ் செய்தனர்.
சட்டசபைத் தேர்தலில் தற்காலிகமாக முரசு சின்னத்தைப் பெற்றது தேமுதிக. இருப்பினும் தேர்தலில் நிறைய இடங்களில் வென்றதன் மூலம், தேர்தல் ஆணைய விதிமுறைகளின்பபடி அக்கட்சிக்கே முரசு சின்னம் ஒதுக்கபப்ட்டது. இருப்பினும் தொடர்ந்து அது தனது வாக்கு சதவீதத்தை தக்க வைக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சின்னம் நிரந்தரமாகாது, கை நழுவிப் போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications