இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் அன்னா குழு போட்டி?

ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் தேர்தலில் எல்லாம் போட்டியிட மாட்டோம் ஆனால் நல்ல வேட்பாளருக்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் நடக்கும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து அன்னா குழுவினர் ஆலோசித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
நாங்கள் எங்கு சென்றாலும் மக்கள் எங்களை தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள் என்று அன்னா குழு உறுப்பினரான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
நாங்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளோம். தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதை மக்களில் எத்தனை பேர் விரும்புகிறார்கள் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். ஆனால் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் ஒரு முடிவு எடுக்கவில்லை என்று மற்றொரு உறுப்பினரான டாக்டர் விஷ்வாஸ் குமார் தெரிவித்தார்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்று அன்னா குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் தேர்தலில் போட்டியிட்டால் ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் பாதிக்கும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலின்போது நேர்மையான மற்றும் லோக்பால் மசோதாவை ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்குமாறு அன்னா குழு செய்த பிரச்சாரம் வீணானது. அதனால் தான் தாங்களே தேர்தலில் போட்டியிட்டால் என்ன என்று அந்த குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications