பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ஊழலா? விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக விமானப் படையில் MI-8 ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றுக்குப் பதிலாக இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ரூ. 3,546 மதிப்பில் AW-101 ரகத்தைச் சேர்ந்த 12 ஹெலிகாப்டர்களை வாங்க 2010-ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது.
ஆனால் இந்த கொள்முதலுக்காக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.350 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இது தொடர்பாக இத்தாலி அரசாங்கம் விசாரணை நடத்தி வந்தது.
மத்திய அரசு உத்தரவு
இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகமும் இது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹெலிகாப்டர் ஊழல் குறித்து இத்தாலி அரசு விசாரணை நடத்தி வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதுபற்றி அறிக்கை அனுப்பி வைக்குமாறு இத்தாலியில் உள்ள இந்திய தூதரகத்தை பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
அதன்படி, இந்திய தூதரகம் அனுப்பி வைத்த அறிக்கையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் பொதுவான நிதி முறைகேடுகள் பற்றித்தான் இத்தாலி அரசு முதல்கட்ட விசாரணை நடத்தி வருவதாகவும், இந்தியா தொடர்பான பணபரிவர்த்தனை பற்றி எந்த விசாரணையும் நடத்தவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த குறிப்பிட்ட ஹெலிகாப்டர் ஊழல் பற்றி இத்தாலி விசாரணை நடத்துமா? என்று தெரியவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.
ஏதேனும் தவறு நடந்திருப்பது தெரிய வந்தால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications