இன்று கூடங்குளம் வரும் அணு மின் விஞ்ஞானிகள் குழு: போலீசார் குவிப்பு
நெல்லை: அணு மின் நிலையப் பணிகளை பார்வையிட விஞ்ஞானிகள் குழு இன்று கூடங்குளம் வருகிறது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1000 மெகாவாட் திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலையில் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்துவிட்டன. முதல் அணு உலை மூலம் ஜூன் மாதம் மின் உற்பத்தியை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பிற அணு மின் நிலையங்களில் இருந்து ஊழியர்கள் கூடங்குளம் வந்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணு சக்தி கழகத் தலைவர் ஸ்ரீகுமார் பானாஜி, மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் சின்ஹா, அணு சக்தி கழக உறுப்பினர்கள் சீனிவாசன், மத்திய நிபுணர் குழு தலைவராக இருந்த முத்துநாயகம், அதில் இடம் பெற்ற பிரதிநிதிகள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு இன்று கூடங்குளம் வருகிறது. இதற்காக இந்திய அணு சக்தி கழக தலைவர் ஜெயினும் கூடங்குளம் வந்துள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலைய பணிகளை பார்வையிடும் குழுவினர் விரைவில் மின் உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்கள். இது தொடர்பான விஞ்ஞானிகள் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மதியம் 12.30 மணி்க்கு கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகளை சந்தி்த்து பேசுகிறார்கள். விஞ்ஞானிகள் குழு கூடங்குளம் வருவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications