சென்னையிலும், புறநகர்களிலும் சின்ன மழை..சற்றே வீழ்ந்தது வெயில்!

அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தின் பல பகுதிளிலும், கேரளாவிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்தக் கோடை மழை இதுவரை சென்னை பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வீட்டு வாசல்களை நனைத்து விட்டுப் போனது லேசான மழை.
காலையில் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகள் பலவற்றிலும் லேசான மழையும், சாரலுமாக இருந்தது. நகரின் பல பகுதிகளில் காலையில் விசிட் அடித்த மழை மக்களை வியப்புக்குள்ளாக்கியது. இந்த லேசான மழையால் பல பகுதிகளில் வெயிலின் உஷ்ணம் லேசாக குறைந்தது.
புறநகர்ப் பகுதிகளில் பெரிய அளவில் மழை இல்லை. சில விநாடிகள் மட்டுமே மழை பெய்து ஓய்ந்து போனது. இருந்தாலும் வானம் மூடி மூடி வருவதால் மீண்டும் மழை வருமா என்று மக்கள் ஆவலோடு காத்துள்ளனர்.
28ம் தேதி வரைக்குமான வானிலை முன்னறிவிப்பு
இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்தில், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும். பிற மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications