மதுரையில் மே 10 - 11 ம் தேதிகளில் பாஜக மாநில மாநாடு
மதுரை: மழை காரணமாக, மதுரையில் ஒத்திவைக்கப்பட்ட பாரதிய ஜனதா மாநில மாநாடு மே 10 ந் தேதி மற்றும் 11 ந் தேதி நடைபெறுகின்றது.
தமிழக பாஜக சார்பில் மதுரையில் நேற்றும், இன்றும் தாமரை சங்கமம் எனும் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. தடும் மழை காரணமாக இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
கடும் மழை குறைந்ததால், மீண்டும் இம் மாநாட்டை நடத்துவது குறித்து அக் கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், மே 10 ந் தேதி மற்றும் 11 ந் தேதி ஆகிய இரு நாட்களில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது
மதுரையில் பாஜக சார்பில் நடைபெற இருந்த மாநாடு மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே திட்டமிட்டிருந்ததைவிட பிரமாண்டமாக மே 10 மற்றும் 11 ந் தேதிகளில் நடத்தப்படும். மே 10 ம் தேதி மாநாடும், 11 ம் தேதி கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களும் நடைபெறும்.
மே 10 ந் தேதி பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசிய தலைவர் நிதின்கட்கரி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி மற்றும் தேசிய, மாநில நிர்வாகிகள் மநாட்டில் பேசுகின்றனர் என்றார்.
-
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications