புதுவையில் பக்கத்து வீட்டுக்காரரிடம் ரூ. 28 லட்சம் ஸ்வாகா செய்த நபருக்கு போலீஸ் வலை
புதுவை: புதுவையில் மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடை உரிமையாளரிடம் ரூ. 28 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
புதுவையில் உள்ள திலாசுப்பேட்டை வேலன் தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). அவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்.
அவரது வீட்டுக்கு அருகே வேலூரைச் சேர்ந்த நவீன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை நடத்தி வருவதாக செல்வகுமாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது தொழிலை விரிவுபடுத்த பணம் தேவை என்று அவர் செல்வகுமாரிடம் கடன் கேட்டுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் தானே என்று நினைத்த செல்வகுமார் தன்னிடம் இருந்த ரூ. 10 லட்சம் மற்றும் தனது நண்பர்களிடம் இருந்து ரூ.18 லட்சம் என மொத்தம் ரூ. 28 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். இதை வாங்கிய நவீன் திடீரென்று தலைமறைவாகிவிட்டார்.
இதை அறிந்த செல்வகுமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான நவீனை வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications