குடியாத்தத்தில் பரிதாபம்.. தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி
குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடந்த கோவில் திருவிழா தேரோட்டத்தின்போது மின்சாரம் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. தொடர்ந்து தேர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. அப்போது நல்ல மழை பெய்ததால், தேர் முழுவதுமாக நனைந்து விட்டது. இந்த நிலையில், தேரை இழுக்க இரும்புக் கம்பியால் ஆன வடம் பொருத்தப்பட்டிருந்தது. அதைப் பிடித்தபடி தேரை பக்தர்கள் இழுத்து வந்தனர்.
நள்ளிரவு வாக்கில் தேர் பேரணாம்பட்டு கூட்டு ரோடு பகுதிக்கு வந்தது. அப்போது மேலே சென்ற மின்சார கம்பியில், தேரின் மேல் பகுதி உரசி அறுந்து விழுந்தது. அப்போது தேரில் மின்சாரம் பாய்ந்து, அத்துடன் இணைந்திருந்த இரும்புக் கம்பியைப் பிடித்தவர்கள் மீது பாய்ந்தது. இதில் கம்பியைப் பிடித்திருந்த அத்தனை பேரும் தூக்கி எறியப்பட்டனர்.
இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. மின்சாரம் தாக்கி விழுந்திருந்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்கள் குடியாத்தம் கார்த்திகேயன், நெல்லூர்பேட்டையைச் சேர்ந்தவர்களான ஈழத்தரசன், புனிதா, விஸ்வநாதன், விக்னேஷ் என்று தெரிய வந்தது. இவர்களில் கார்த்திகேயனும், விக்னேஷும் 19 வயதானவர்கள்.
மின்சாரம் தாக்கியவர்களில் 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தால் தேர் அங்கேயே நிறுத்தப்பட்டது. பின்னர் தேருக்கு சிறப்புப் பூஜைகள் செய்து மீண்டும் வடம் பிடித்து இழுத்து நேற்று காலை நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தினர்.
சமீபத்தில்தான், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கயிலாயநாதர் கோவில் தேர் அச்சு முறிந்து சரிந்து விழுந்ததில் தேரின் அடியில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதேபோல நாகூர் ஆண்டவர் செய்யது அப்துல் காதிர் நாயகம் நினைவு நாளை முன்னிட்டு நாகூர் தர்காவில் நடந்த 455வது ஆண்டு கந்தூரி விழாவின்போது, அலங்கரிக்கப்பட்ட ரதம் மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், குடியாத்தத்தில் தேர் மீது மின் கம்பி விழுந்து ஐந்து பேரின் உயிரைப் பறித்துள்ளது மக்களை அதிர வைத்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications