குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என அதிமுக முடிவெடுக்கவில்லை : ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நடைபெற்ற தேசிய தீவிரவாத தடுப்பு மைய மாநாட்டில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக யாரும் தம்மிடம் பேசவில்லை.. இந்த விஷயத்தில் அதிமுக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 10 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும் ஜெயலலிதா கூறினார்.
டெல்லி செல்லும் முன்பாக சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதும், முதல்வர்கள் மாநாட்டுக்கு மட்டுமே தாம் செல்வதாகவும் தம்மை குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக யாரும் அணுகவில்லை என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications