நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்

திருவண்ணாமலையில் நேற்று ராத்திரி நித்தியானந்தாவுக்கு பட்டாபிஷேகம் நடத்தினார் மதுரை ஆதீனம். அதன் பின்னர் அவர் பேசுகையில், வாழ்நாளில் இந்த நாள் புதிய நாள். மன மகிழ்ச்சி, மன நிம்மதி தரும் நாள்.
சிவன்-பார்வதி நிறைந்த திருவண்ணாமலையில் ஆதீன தலைவராக நித்தியானந்தாவை அறிவித்து பட்டாபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்று. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலம், அருணகிரிநாதர் அருளிய தலம், ரமணர் சேஷாத்திரி, விசிறி சாமியார் வாழ்ந்த தலம் திருவண்ணாமலை.
ஆதீனமாக பதவி வகிக்க மேதை, ஞானி, பக்குவம், போர்க்குணம் ஆகியவை இருக்க வேண்டும். அது திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு இருக்கிறது.
சிவன்-பார்வதி எனது மனதில் தோன்றி மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நித்யானந்தாவை அறிவிக்க வேண்டும் என்று கூறினர். அதன்படி நித்தியானந்தா அறிவிக்கப்பட்டு உள்ளார். நாங்கள் செய்த புண்ணியத்தால் நித்தியானந்தா கிடைத்துள்ளார்.
முதலில் அவர் ஆதீனமாக பதவி ஏற்க மறுத்தார். பல பிரச்சனைகள் வரும் என்று கூறினார். ஆனால் நான்தான் அவரை வற்புறுத்தி ஆதீனமாக பதவியேற்க வைத்துள்ளேன்.
இளைய ஆதீனமாக யாரை அறிவிக்க வேண்டும் என்ற அதிகாரம் எனக்கு மட்டும்தான் உள்ளது. நித்தியானந்தா பரம்பரை தென்மண்டல சைவ வேளாளர் பிரிவில் இருந்து வந்தவர். அவர் ஆதீனமாவதற்கு முழு தகுதியும் உள்ளது.
ஆதீனங்கள் கோர்ட், போலீஸ் நிலையத்துக்கு செல்லக்கூடாது. ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது.
மதுரை ஆதீனத்துக்கு சிறந்த நிர்வாகியை உருவாக்கி செல்வதால் என் உயிர் மூச்சு மகிழ்ச்சியுடன் பிரியும் என்று பேசினார் மதுரை ஆதீனம். அவரது பேச்சை நித்தியானந்தா ஆதரவாளர்கள், சீடர்கள் கைகள் தட்டி வரவேற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications