லீவு கேட்ட ஆசிரியையை தரக்குறைவாக திட்டிய அதிகாரி.. ஆசிரியர்கள் கொந்தளிப்பு
தேனி: உத்தமபாளையத்தில் உடல் நலம் பாதித்த மகளைப் பார்க்க விடுப்பு கேட்ட ஆசிரியையை மாவட்டக் கல்வி அதிகாரி தரக்குறைவாக திட்டியதால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள விகாசா வித்யாலயாவில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி விடைத்தாள் திருத்தி வருகிறார். ராணுவத்தில் இருந்த அவரது கணவர் கார்கில் போரில் பலியாகிவிட்டார். மகள் மகேஸ்வரி கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அவருக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மகளைப் பார்க்க ஒரு நாள் விடுப்பு வழங்குமாறு விஜயலட்சுமி மாவட்டக் கல்வி அதிகாரி முருகனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் விடுப்பு தராமல் இழுத்தடித்துள்ளார். பின்னர் விஜயலட்சுமியிடம் மகளைப் பார்க்க உங்கள் கணவரை அனுப்பி வைக்க வேண்டியது தானே என்று கூறி தரக்குறைவாகத் திட்டியிய பிறகு விடுப்பு கொடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்த பிற ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்திவிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் விடைத்தாள் திருத்தும் பணி 2 மணி நேரம் பாதித்தது. போலீசார் வந்து சமரசம் செய்துவைத்த பிறகே அவர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications