கேரளாவில் பணிபுரியும் பிற மாநிலத் தொழிலாளர்கள் போலீசில் பதிய வேண்டும்!
திருவனந்தபுரம்: கேரளாவில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்கள் விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அங்கு பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்கள் விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கேரள உள்துறை அமைச்சர் திருவச்சூர் ராதாகிருஷ்ணன் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கேரளாவின் பாதுகாப்பை மேம்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிற மாநில தொழிலாளர்களின் விவரங்கள் காவல் நிலையங்களில் இருந்தால் அவற்றை வைத்து அவர்களின் பின்னணி, குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா போன்றவற்றை கண்டறிவது எளிதாகும். எனவே அந்த விவரங்களை வைத்து தொழிலாளர்களை கண்காணிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.
இது தவிர நலத்திட்டங்களை செயல்படுத்தவும் தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்வது உதவும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications